4 வயது சிறுமியை வன்கொடுமை செய்த புரோட்டா மாஸ்டர்!



 புரோட்டா மாஸ்டர் ஒருவர் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ள நிலையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று குடிபோதையில் வந்த இவர், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி அழுததால், அவரது அழுகை குரல் வெளியில் கேட்காமல் இருப்பதற்கு தேவராஜ் வாயை கைகளால் மூடிய போது, மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

இதனைப் பார்த்து பயந்து போன புரோட்ட மாஸ்டர் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில், சிறுமியின் மூக்கில் ரத்தம் வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவத்தைக் கேட்ட தாய் பதறியடித்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரித்த போது நடந்த சம்பவத்தினை சிறுமி கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பொலிசார் தேவராஜ்ஜை கைது செய்து விசாரித்த போது வன்கொடுமை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தற்போது புரோட்டா மாஸ்டர் தேவராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad