யாழ் கல்வியியல்கல்லுாரியில் கற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு தனது பிரிவில் கற்றுக் கொண்டிருந்த மாணவனை லவ் பண்ணி 6 வருடங்களாக காதலை தொடர்ந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் தற்போது காதலனைக் கைவிட்டு சுவிஸ் மாப்பிளையை கரம்பிடிக்க ஆயத்தமாகியுள்ளார்.
தீவுப் பகுதியில் கற்பிக்கும் குறித்த ஆசிரியையை வன்னியில் கற்பிக்கும் தனது காதலனுக்குத் தெரியாமல் வீட்டில் பேசிய வெளிநாட்டு மாப்பிளைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனைக் கேள்விப்பட்ட காதலன் இது தொடர்பாக ஆசிரியையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தன்னை மறந்து விடும்படியும் அம்மா நோயாளியாக உள்ளதாகவும் அவரது விருப்பத்திற்கு ஏற்ப தான் வெளிநாட்டு மாப்பிளைக்கு உடன்பட்டதாகவும் கூறியதால் கடும் கடுப்பான காதலன் ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று அமளிதுமளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அங்கு கூடிய ஆசிரியையின் உறவுகள் காதலனைத் தாக்கியதுடன் பொலிசாரிடமும் ஒப்படைத்ததாகத் தெரியவருகின்றது. தற்போது காதலன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதே வேளை அவர் ஊடகவியலாளர்களையும் சந்தித்து நியாயம் கேட்கவுள்ளதாகவும் காதலனின் நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.