நாட்டில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்துக்ககுள்ளானவர்கள் என்பதுடன் மற்றைய இருவர் பாதசாரிகள் ஆவார்கள்.
அதோடு நாளொன்றுக்கு சுமார் 10 பேர் வரையில் வாகன விபத்துக்களில் உயிரிழப்பதும் 40 பேர் வரையில் காயமடைவதும் என்பது சாதாரண விடயமாக கருத முடியாது.
மறுப்புறம் சிறிய ரக வாகன விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுமே அதிகமாக உள்ளது.
எனவே சமூகத்தில் அனைவரும் வீதி விபத்துக்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் மறுப்புறம் சாரதிகளும் எச்சரிக்கையாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.