குறித்த ரீச்சர் வட்சப் குறுாப் ஒன்றில் இணைந்திருந்ததாகவும் அந்த குறுாப்பில் இருந்த சுவிஸ் அங்கிள் போடும் பதிவுகளை ரீச்சர் வாசித்து அதற்கு அந்த குறுாபுக்குள்ளேயே கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாகவும் அதன் பின்னர் அவர் ரீச்சரை தனி அழைப்பில் தொடர்பு கொண்டு நட்பாக இருந்ததாகவும் பொலிசாருக்கு ரீச்சர் கூறியுள்ளார். இந்த நட்பின் உச்ச வெளிப்பாடாக ரீச்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று எடுப்பதற்காக பணம் அனுப்பியுள்ளார் சுவிஸ் அங்கிள்.
அதன் பின்னரே அவரது சுயரூபம் வெளியாகத் தொடங்கியுள்ளது. ரீச்சரின் அந்தரங்க உடலை பார்வையிட அவாப்பட்டுள்ளார் சுவிஸ் அங்கிள். அத்துடன் இலங்கைக்கு வரவும் ஆயத்தமாகியுள்ளார். பணம் பெறும்வரை அங்கிளின் அட்டகாசங்களுக்கும் அங்கிள் தனது உடலை நிர்வாணமாக அனுப்பும் புகைப்படங்களையும் ரசித்து வந்த ரீச்சர் பணம் பெற்றவுடன் அங்கிளின் தொடர்பை துண்டிக்க முற்பட்டுள்ளார்.
அவருடன் தொடர்பு கொள்ளாமல் விட்டவுடன் ஆரம்பத்தில் ரீச்சர் இருந்த வட்சப் குறுாப்புக்குள் ரீச்சரைப் பற்றி சாதுவாக அங்கிள் வெளிப்படுத்த முற்பட்டுள்ளார். அதன் பின்னரே இருவருக்கும் மோதல் உண்டாகி தற்போது பொலிஸ் நிலையம் வரை வந்துள்ளது. அத்துடன் அந்த குறுாப்பில் அங்கிளின் நிர்வாணப் புகைப்படங்களை அந்த குறுாப்பில் இருக்கும் இன்னொரு அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டுவருகின்றார். இதனால் குறித்த வட்சப் குறுாப்பில் இருந்தர்வர்கள் இவர்களது சண்டை மற்றும் பொலிசாரிடம் முறையிட்டதையும் அறிந்து வட்சப் குறுாப்பை விட்டு ஓடத் தொடங்கியுள்ளார்களாம்.