யாழில் சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில், ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த வேறு ஒரு நபர், ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவரை வாளால் வெட்டியுள்ளார்.

குறித்த சம்பவத்தினால் காயமடைந்தவரை அருகில் இருந்தோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர் பயன்படுத்திய வாளை மீட்ட ஆலய நிர்வாகத்தினர், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை திருநெல்வேலியினைச் சேர்ந்தவரே வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் ஆலய தகராரே வாள்வெட்டு சம்பவம் இடம்பெறுவதற்கு காரணமெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad