திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் பயணக்கட்டுப்பாட்டின்போது, அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்.
அது தொடர்பில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெளிவுப்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாளை முதல் அத்தியவாசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக மாத்திரம், பொதுப் போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.