திருமணத்திற்கு சகோதரரிகள் இரண்டு பேர் செய்த தவறு தற்போது அவரது கணவர் வீட்டிலிருந்து அடித்து துரத்தப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணிபுரிந்து வந்த செந்தில்குமார். இவர் முகநூலில் அதிகமாக நேரத்தினை செலவிட்டு வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த 22 வயது பெண்ணுடன் நட்பாக சேட் செய்து, பின்பு நேரில் சந்தித்ததோடு, அடிக்கடி தனிமையிலும் இருந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் பெற்றோர் திடீரென அவருக்கு திருமணம் செய்து வைத்ததால், செந்தில்குமாருக்கு சேட் செய்வதை நிறுத்தியதோடு, அவ்வப்போது பெற்றோர் வீட்டிற்கு வரும் போது தனது தங்கையில் செல்போன் மூலம் சேட் செய்துள்ளார்.
அக்கா மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்ற பின்பு, தங்கையின் செல்போனுக்கு தொடர்கொண்டு பேசிய செந்தில் அவரிடமும் நட்பாக பேசி தனது வலையில் விழ வைத்து தனிமையில் இருந்ததோடு, அக்கா தங்கை இருவருடன் தனிமையில் இருக்கும் போது தெரியாமல் புகைப்படமும் எடுத்துள்ளார்.
பின்பு தங்கைக்கு திருமணம் முடிந்ததால் அவரும் சேட் செய்வதை நிறுத்தியுள்ளார். ஆனால் சகோதரிகள் இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கணவர் வீட்டினர் விசாரித்த போது உண்மையினைக் கூறியுள்ளனர். பின்பு கணவர் வீட்டிலிருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.
இதனை தெரிந்துகொண்ட செந்தில் புதிய நம்பர் மூலம் தொடர்பு கொண்டு, தனது குரலை மாற்றி பேசி பணம் கொடுத்தால் இந்த புகைப்படம், காணொளிகளை அழித்துவிடுவேன் என்றும் இல்லையென்றால் சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
ஆனால் சகோதரிகள் செந்தில் என்று தெரியாமல் அவரை மீண்டும் வரவழைத்து, தங்களை யாரோ மிரட்டுவதாக கூறி, அவர்களிடம் 40 சவரண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிடுமாறு செந்திலிடமே கொடுத்து அனுப்பியுள்ளனர்.
பின்பு மீண்டும் மிரட்டல் போன் வந்ததோடு பணமும் கேட்டுள்ளனர். பின்பு குரலைக் கண்டுபிடித்து செந்தில் என்று தெரிந்துகொண்ட சகோதரிகள், அவரை சத்தம் போட்டுள்ளனர். ஆனால் செந்திலோ நேருக்கு நேராக மிரட்டல் விடுத்துள்ளார்.
சகோதரரிகள் இருவரும் துணிந்து திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், செந்தில் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.