இந்தியாவில் பெற்ற தந்தையை மகளே காதலனுடன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பரேலியில் வசிக்கும் 46 வயதான விவசாயி ஹர்பால் சிங். இவரது மகள் பிரீத்தி.
ஹர்பால் சிங்கிற்கு அங்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரீத்தி அப்பகுதியில் வசிக்கும் தர்மேந்திர யாதவ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
இதனால் தந்தையிடம் வந்து தான் நபர் ஒருவரைக் காதலிப்பதாகவும், தனக்கு குறித்த 10 ஏக்கர் நிலத்தினை எழுதி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கு தந்தை மறுத்துள்ளதால் கோபமடைந்த பிரீத்தி காதலனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தந்தையிடம் சமாதானம் பேசுவதாக வந்து அவருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக்கொடுத்து போதையில் மயங்க வைத்துள்ளனர்.
பின்பு காதலனை வரவழைத்து தந்தையை கொலை செய்து மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்தது போன்று செட்டப் செய்துள்ளனர்.
மறுநாள் இறந்த நபரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, உடலை பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் கொலை செய்ததை கண்டுபிடித்த பொலிசார் அவரின் மகள் மற்றும் காதலன் தர்மேந்திர யாதவ் இருவரையும் கைது செய்துள்ளனர்.