யாழ்.வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிசம் செய்த நபரை கைது செய்த பொலிஸார் சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.
நேற்றையதினம் துன்னாலை பகுதி வீதியால் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணின் இடுப்பை கிள்ளியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில்மிசம் செய்தவரை குறித்த பெண் அடையாளம் காட்டப்பட்டியதையடுத்து அவரை பொலீஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.