பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ பஸ்ஸொன்று ஜீப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இறந்தவர்கள் ஒரு துப்புரவு நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும் கூறப்படுகின்றது.
பொலன்னறுவையிலிருந்து மன்னம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை ஏற்றிச் சென்ற இராணுவ பஸ்ஸும், பொலன்னறுவை வைத்தியசாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய ஜூப் ஒன்றுமே விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பெண்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதுடன், விபத்து நடந்த நேரத்தில் ஜீப்பில் 13 பேர் பயணம் செய்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.