நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளது ரிஷாட்டின் மனைவி உள்ளிட்டவர்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். சிறுமியின் மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
இதன்படி, ரிஷாட் பதியுதீனின் மனைவி, தந்தை மற்றும் குறித்த சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஊழியராக பணிபுரிந்த 22 வயதான பெண் ஒருவரும் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரும் கைது செய்யப்பட்டார், அவரும் நாளை வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்த பொலிஸின் விசாரணைகள் தொடர்பில் தமக்கு திருப்தியடைய முடியாது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.