சென்னை அருகே குழந்தைகளை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கௌரி என்ற பெண்ணுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
மதுவுக்கு அடிமையான ரமேஷ் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்து விடுவதால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கௌரி குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். அதன்படி, கணவன் வீட்டிற்கு வருவதற்குள் குழந்தைகள் கழுத்தில் சேலையை மாட்டி தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளும் துடிக்க துடிக்க உயிர் விடுவதை கண்டு முடித்து, இறந்துவிட்டதை உறுதி செய்த பிறகு, தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.