குளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்!

இந்தியாவில் அத்தைக்கும், மருமகனுக்கும் நடந்த மோதலில் அத்தையை கொலை செய்த மருமகன் தானும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள டகடோரா பகுதியில் பிரயாகராஜ் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் ஜெனரலாக பணியாற்றி வருபவர் கன்ஷ்யாம். இவரது மனைவி அனிதா.

இவர்களது மருமகன் அஜித்(38) மற்றும் தனது மகன்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மாமியார் அனிதாவிற்கும் மருமகன் அஜித்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த அஜித், கடந்த திங்கள்கிழமையன்று தனது அத்தையை குழியலறையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்பு தனது படுக்கையறைக்குச் சென்று தானும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அனிதாவின் மகன் ஆலங்கர் தனது தந்தையை போனில் அழைத்து தகவலை தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

அப்பொழுது தனது மனைவி அனிதாவும், மற்றொரு அறையில் மருமகனும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்பு வழக்கு பதிவு செய்த பொலிசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad