கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமையை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மருதானை தொடக்கம் புறக்கோட்டை மற்றும் காலி முகத்திடல் வரையிலான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.