தமிழகத்தின் தேனியில் மருமகனுடன் சேர்ந்து பெற்ற தாய் ஒருவர் மகளை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் கல்யாண் குமார், இவரது மனைவி ரஞ்சிதா.
இவர்களுக்கு 8 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ரஞ்சிதா இறந்து விட்டதாக கல்யாண் குமார் தெரிவித்துள்ளார்.
இதையே அவரது தாயான கவிதாவும் கூற, இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் ரஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் போலீசிடம் புகார் அளிக்க, பாதி எரிந்த நிலையில் ரஞ்சிதாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து ரஞ்சிதாவின் கணவர் மற்றும் தாயிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
அதாவது, ரஞ்சிதாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்து வந்ததாகவும், இதை கண்டித்தும் ரஞ்சிதா தொடர்பை நீடித்ததால் இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.