மன்னார் பொலிஸ் பிரிவுக்கட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது, இன்று (14) அதிகாலை, இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மன்னார் – வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் – பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றுமே, இவ்வாறு கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடுகள் உடைந்து சேதமாகியுள்ளன.
இது தொடர்பில், மன்னார் பொலிஸார் மற்றும் ‘சோகோ’ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் அதிகாலை, மேலும் மூன்று சிற்றாலயங்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.