இலக்கியாவை தொழிலுக்கு அழைத்த ரவுடி பேபி சூரியா.

டிக் டாக்கில் பல ஆபாச பாடல்களுக்கு நடனமாடி, வாயசைத்து பிரபலமானவர்கள் இலக்கியா மற்றும் ரவுடி பேபி சூர்யா. சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சூர்யா, திறமைகளை காட்ட டிக்டாக்கிற்கு வந்தவர் லைக் மற்றும் ஃபாலோயர்களை கவர கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

அரைகுறை ஆடைகளுடன் இரட்டை அர்த்தம் கொண்ட டயலாக் மற்றும் பாடல்களுக்கு ஆடி, பாடி வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். தொடர்ந்து தனக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு ஆபாசமாக பதிலளித்தும், தனிநபரை குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார் சூர்யா. டிக் டாக் மூலம் ரவுடி பேபி சூர்யா என பிரபலமான இவர், திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் நடைபெற்ற மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனது மகனுடன் வேறொரு ஆணுடன் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து முகநூலில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. டிக் டாக்கில் வந்த புதிதில் ஆபாச கமெண்ட்களை பொறுத்துக் கொள்ள முடியாமலும், தன்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பதாகவும் கூறி கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சூர்யா, தற்கொலை முயற்சியும் செய்துக் கொண்டது உண்டு.

இவர் இப்படி என்றால், இலக்கியா இவரை விட 10 மடங்கு வேறலெவல். உடலின் அங்கங்களை வெளிப்படையாகவே தெரிய உடைகளை அணிந்தவாறு செக்ஸியாகவே வீடியோக்களை டிக் டாக்கில் வெளியிட்டார். டிக் டாக்கில் அதிகளவு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த இலக்கியாவை பலரும் பேட்டியெடுத்த போது, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பெற்றோரை உதரி சென்னை வந்த அவரை, திரைத்துறையை சேர்ந்த பலர் ஏமாற்றி விட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

இவரது கதையை கண்டு பலரும் ஒருபுறம் வருந்தினாலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக இப்படி ஓவர் கவர்ச்சி காட்டுவதாக என திட்டவும் செய்தனர். டிக் டாக்கில் பிரபலமானதை அடுத்து சில படங்களில் இலக்கியாவுக்கு வாய்ப்பும் கிடைத்தது.

இப்படியிருக்க தற்போது ரவுடி பேபி சூர்யா, இலக்கியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் பாலியல் தொழில் செய்ய அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே ரவுடி பேபி சூர்யா, பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் நாளிதழ்கள் மூலம் கூறப்படுகிறது. ஒரு இளம் பெண் தன்னை சூர்யா பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்ததாக வாக்கு மூலமும் அளித்தார். ஏழை பெண்களை குறிவைத்து சென்னையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இலக்கியாவை மூளைச் சலவை செய்யும் சூர்யா உனது பேமண்ட் என்ன எனக் கேட்க? ஒரு நபருடன் 2 மணி நேரத்திற்கு ஒரு ரூ.1லட்சம் வாங்குவதாக இலக்கியா கூறிய போது, கண்டிப்பாக அனைவரின் மனதிலும் ஆணி இறங்கியிருக்கும். தொடர்ந்து சூர்யா, 2 மாதங்களுக்கு சிங்கப்பூரில் வேலை உண்டு மாதச்சம்பளம் எவ்வளவு கேட்க உனக்கு எனக் கேட்கிறார். அதற்கு இலக்கியா இரண்டு மாதத்திற்கு சேர்த்து ரூ.6 லட்சம் வேண்டும் என கூற, சரி எனது மாமா தான் அங்கு நம்மை வேலைக்கு அமர்த்த உள்ளதாகவும், அவரிடம் இதனை பற்றி கூறிவிடுகிறேன் எனச் சொல்லி போனை வைக்கிறார்.

தற்போது முகநூலில் இந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபலத்திற்காகவும், பணத்திற்காகவும் இப்படி பாலியல் தொழிலுக்கு மற்ற பெண்களையும் மூளை சலவை செய்து அழைத்து செல்வது எந்த விதத்தில் நியாயம்? இந்த ஆடியோவை வைத்து ரவுடி பேபி சூர்யா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad