சில நாட்களுக்கு கொழும்பு நகரத்திற்குள் 14 பேர் கோவிட்டின் புதிய பிறழ்வின் தொற்றுக்கு இலக்காகி கண்டறியப்பட்மையை அடுத்து, கொழும்பு நகரம் எச்சரிக்கைக்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நகரத்தில் 14 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட உள்ளன.
இதனையடுத்து சில நாட்களில் இந்த பிறழ்வு குறித்து அமைச்சு எமக்கு தெரிவிக்கும். கோவிட் பிறழ்வுடன் கண்டறியப்பட்டுள்ள 14 பேர் ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் விடயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை டெல்டா மாறுபாட்டைக் கொண்ட நிலையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 20 பேரில் பெரும்பாலான நோயாளிகள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.