இரண்டாம் திருமணம் செய்த கணவன்-தேடி சென்ற மனைவிக்கு நடந்த சம்பவம்!

 


தமிழகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் தலைசுற்றவைக்கும் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 4 வயதில் யோகன் என்ற மகன் உள்ளான். திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சிந்தாமணி பிரிந்து சென்ற சில ஆண்டுகளில் மணிவண்ணன் வேறு திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே சிந்தாமணியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தாயும் இறந்து விட்டார். இதனால் சிந்தாமணியின் உறவினர்கள் இனி, நீ கணவர் வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்க்கை நடத்து என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து சிந்தாமணி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர் வீட்டுக்கு வந்தார். அப்படி இருந்தும் மணிவண்ணன், சிந்தாமணியை ஏற்று அந்த பகுதியில் ஒரு வீடு பார்த்து குடிஅமர்த்தினார்.

இதற்கிடையே நேற்று மாலை சிந்தாமணி அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பொலிசார் சிந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிந்தாமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி்னார்.

அதன்பிறகே அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே சிந்தாமணியின் சாவு குறித்து பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.  

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad