யாழில் பெண்களால் தாக்கப்பட்ட இளைஞர்-தற்கொலை!

 


யாழ்ப்பாணம் - நாவாந்துறை, கண்ணாபுரத்தில் புறா விவகாரம் தொடர்பில் இளைஞன் ஒருவரை இரு வாரங்களுக்கு முன்னர் பெண்கள் பலர் இணைந்து மிக மோசமான முறையில் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் மனமுடைந்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் 26ம் திகதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரை தாக்கும் காட்சிகள் சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டதால் மனமுடைந்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த இளைஞருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் தற்கொலை தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad