இலங்கையில் கோவிட் உருமாறிய திரிபான டெல்டா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பல பிரதேசங்களில் டெல்டா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெல்டா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கொலன்னாவை, கோட்டே, நவகமுவ, மாஹபாகே, அங்கொடை, இரத்மலானை, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் டெல்டா வைரஸ் தொற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.