காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் திருமணமான ஆறு மாதத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் நீலம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (21), கீர்த்தனா (21). இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் சில நாட்களாக தகராறு ஏற்பட்டதால் கீர்த்தனா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தாய் மற்றும் தந்தை இல்லாத நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை அவரை தற்கொலைக்கு செய்ய முடிவு எடுக்க வைத்தது.
கடந்த 16ஆம் தேதியன்று வீட்டில் செல் ஆயிலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து தகவலறிந்து ராமச்சந்திரன் தனது மனைவி கீர்த்தனாவை மீட்டு ராஜாஜி மருத்துவமனயில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கீர்த்தனா நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கீர்த்தனா தற்கொலைக்கான காரணம் குறித்து ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.