இந்தியாவில் திருமணமான 21 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபூரை சேர்ந்தவர் லிலாதர். இளைஞரான இவருக்கும் ஊர்மிளா என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருமணம் முடிந்த நாள் முதலே ஊர்மிளாவின் கணவர், மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக ஊர்மிளா தனது தாயார் வீட்டில் இருந்த நிலையில் நேற்று கணவர் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் தனது அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்ட ஊர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ஊர்மிளாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். மேலும் இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த ஊர்மிளாவின் குடும்பத்தார் அங்கு வந்தனர்.
பின்னர் உயிரிழந்த புதுப்பெண்ணின் சகோதரர் ராம்ஸ்வரூப் பொலிசாரிடம் கூறுகையில், ஊர்மிளாவை அவர் கணவர், நாத்தனார் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தனர்.
அவர்களின் குணத்தை அறிந்த ஊர்மிளா அதிர்ச்சியில் இருந்து வந்தார், இந்த சூழலில் தான் அவள் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர் மீதும் ஊர்மிளாவை தற்கொலைக்கு தூண்டியதாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.