யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 55 பேர் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் போது உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் இரண்டு வயதும் ஆறு மாதமும் நிரம்பிய பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.