சமோசாவுக்காக இளைஞர் தீக்குளித்து தற்கொலை!

 


மத்திய பிரதேச மாநிலத்தில், சமோசாவுக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து பலியான சம்பவம் வெளியாகி கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், அனுப்புர் மாவட்டம் அமர்கன்டக் என்ற இடத்தில் உள்ள பந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்பகுதியில் உள்ள சமோசா கடை ஒன்றில் இரண்டு சமோசா வாங்கியுள்ளார்.

அதற்கு 20 ரூபாய் தரும்படி கடைக்காரர் கேட்டுள்ளார். ஆனால், சமோசா வாங்கிய இளைஞர் 15 ரூபாய் மட்டுமே தர முடியும் எனக் கூறியுள்ளார்.

மேலும் திடீரென்று ஏன் சமோசா விலையை உயர்த்தினீர்கள் எனக் கேட்டு, கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது, அருகில் உள்ள காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட கடைக்காரர் புகார் கொடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு பிறகு, மண்ணெண்ணெய் ஊற்றி அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad