கடலூரில் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்ற முயன்ற நபருடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல் நிலையத்திலேயே மகளிர் போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(21) கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் இருந்துள்ளார்.
இதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(24) தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஒருகட்டத்தில் கலைச்செல்வி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் உடனடியாக திருமணம் செய்துக்கொள்ளும்படியும் தமிழ்ச்செல்வனிடம் கலைச்செல்வி கூறியுள்ளார்.
இதற்கு அவர்,மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கலைச்செல்வி ஆறு மாத கர்ப்பமானது வீட்டில் விஷயம் தெரிந்து விட வீட்டில் உள்ளவர்கள் தமிழ்ச்செல்வன் வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை கேட்டுள்ளனர்.
அப்போது தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் திருமணம் செய்ய முடியாது என எதிர்ப்பு தெரிவித்து விட்டனர்.
இந்த நிலையில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் தன்னை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக கலைச்செல்வி புகார் கொடுத்தார். இந்த புகாரினை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தமிழ்ச்செல்வனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து நேரில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.