மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

 



மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான பரமானந்தம்-கிரிதரன் வயது (35) என்பவர் தனது உணவகத்தில் வழமை போன்று உணவுப்பொருட்களை தனது உதவியாளருடன் விற்பனை செய்து இரவுச்சாப்பாடு உண்டு விட்டு தனது கடையின் அறையினுள் இருவருமாக நித்திரை செய்ததாகவும் பின்னர் அவரின் உதவியாளர் அதிகாலை வேளையில் அவரை தட்டி எழுப்பியபோது இறந்த நிலையில் காணப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவுக்கு அமைய வெல்லாவெளி பிரதேச பிரிவுக்குட்பட்ட திடீர்மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு கட்டளையிட்டார். மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad