பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட கௌஷி வெடிகாரச்சி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவரது நியமன கடிதம் பிரதமர் அலுவலகம் மீள கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நியமனம் தொடர்பாக பிரதமர் ஊழியர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு மற்றும் புரிதல் இல்லாததால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் பிரதமரின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். குறித்த நியமனம் தொடர்பில் பிரதமர் ஊழியர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌஷி வெடிக்காரச்சியின் கணவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும், இயக்குனருமான தமித விக்ரமசிங்க என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.