ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த காரியம்: அட்வைஸ் செய்தவரின் பரிதாபநிலை!

 


போதையில் காதலன் மற்றும் தோழிகளுடன் இளம்பெண் செய்த காரியத்தினை அவதானித்த நபர் ஒருவர் அட்வைஸ் செய்ததால், தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லட்சுமி பிரியா. இவர் நேற்று இரவு தனது காதலர் மற்றும் தோழி மற்றும் அவரது நண்பர்களுடன் போதையில் தள்ளாடியடி வந்துள்ளார்.

இதனை அவதானித்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி புருஷோத்தமன், லட்சுமி பிரியாவிற்கு அட்வைஸ் செய்துள்ளார்.

போதையில் இருந்த நாலு பேருக்கும் புருஷோத்தமனின் அறிவுரைகள் எரிச்சலை தந்ததுடன், தனது மகிழ்ச்சிக்கும் இடையூறாக இருப்பதாக நினைத்து, அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து தலையிலும், முகத்திலும் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் புருசோத்தமன் மயங்கி விழுந்த பின்பு குறித்த நான்கு பேரும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்பு காவலாளிக்கு மயக்கம் தெளிந்த பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த பொலிசார் வீட்டிற்கு வந்த போது அங்கு லட்சுமி பிரியாவும், காதலர் விக்னேஷும் மட்டுமே சிக்கியுள்ளனர். மற்ற இருவரும் தலைமறைவாகிய நிலையில், பொலிசார் தேடி வருகின்றனர். 


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad