யாழ்.பல்கலைகழகத்தை சேர்ந்த 140 பேருடைய மாதிரிகள் பல்கலைகழக மருத்துவ பீடத்தில் பரிசோதிக்கப்பட்ட நிலையில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி வெளிமாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்றும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
அத்துடன் தொற்றுக்குள்ளான மாணவி யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீடத்தினைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.