காதலருடன் இணைந்து கணவரை கொலை செய்த மனைவி!

 


கணவரை பெண் ஒருவர் தனது காதலருடன் இணைந்து மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மைசூருவில் உள்ள ஒரு கார்ப்பரேஷனில் குரூப் டி ஊழியராக பணிபுரிந்த எச்.டி வெங்கடராஜு. இவரது மனைவி உமா. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

கணவரை விட உமா 20 வயது இளையவர் ஆவார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்பு உமா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவினாஷ் என்பவரைக் காதலித்துள்ளதோடு, இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட கணவர் மனைவி உமாவை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் உமா தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ய முடிவெடுத்து, இரவில் காபி ஒன்றில் தூக்க மருந்தினைக் கலந்து கொடுத்துள்ளார்.

மயக்கத்தில் இருந்த கணவரை நள்ளிரவில் மர்ம உறுப்பினை நசுக்கி கொலை செய்ததோடு, அக்கம் பக்கத்தினரிடம் தலைவலியால் இறந்துவிட்டார் என்று கூறி நம்பவைத்துள்ளார்.

ஆனால் இறந்தவரின் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டதன் பேரில் பொலிசில் பகார் அளித்துள்ளார். பின்பு வெங்கடராஜுன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் மர்ம உறுப்பை சேதப்படுத்தி கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. மனைவி உமாவை பொலிசார் கைது செய்துள்ளனர். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad