வாசியொருவர் சமூக ஊடகங்களில் நீதி கோரியுள்ளார்.
சுவிற்சர்லாந்து வாசியொருவரை பதிவு திருமணம் செய்து, அதை மறைத்து யாழ்ப்பாணத்தில்
இன்னொரு திருமணம் செய்து இரண்டு மாப்பிள்ளைகளிற்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிய அவர் ஒரு
ஆசிரியையாவார்.
விடயத்தை அறிந்த புது மாப்பிள்ளையும் அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு குட்பாய்
சொல்லி விட்டார்.
யாழ் சேர்ந்த ஆசிரியையொருவரின் ஒன்றுவிட்ட சகோதரி சுவிற்சர்லாந்தில் திருமணம்
முடித்திருந்தார்.
ஆசிரியை அப்போது பல்கலைகழக மாணவியாக இருந்த போதே, அக்காவின் கணவருடன் காதலுறவை
ஏற்படுத்தியுள்ளார். இந்த தகவலறிந்த அக்கா, தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
இதை தொடர்ந்து, இலங்கை வந்த அத்தான், மனைவியின் தங்கையை பதிவு திருமணம் முடித்தார்.
சுமார் 6 வருடங்களின் முன்னர் இருவரும் திருமணம் முடித்தனர். யாழ் நகரிலுள்ள
விடுதியொன்றில் தங்கியிருந்தபடி, நகரிலுள்ள விவாக பதிவாளரின் முன்னிலையில் பதிவு
திருமணம் செய்தனர்.
இந்த திருமண உறவு நீடித்துக் கொண்டிருந்த போதே, அவர் வேறு இருவருடன் திருமணம் செய்ய
முயன்றுள்ளார். ஒரு முறை மோதிரம் மாற்றுவது வரை சடங்கு முடிந்திருந்தது. எனினும்,
காதல் மனைவியில் “கண்ணும் கருத்துமாக“ இருந்த கணவன், விடயத்தை கண்டறிந்து, தடுத்து
நிறுத்தியுள்ளார். மோதிரம் மாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், நிச்சயிக்கப்பட்ட மணமகனுடன் பேசி,
அந்தப் பெண் தனது மனைவியென்ற ஆதாரங்களை காண்பித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், சில வாரங்களின் முன்னர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.
இந்த திருமணத்திற்கான சேலை வாங்கிய போது, சுவிஸ் கணவனுடன் தொலைபேசியில் பேசியபடியே
சேலையை தெரிவு செய்தார். இளைய சகோதரியின் பல்கலைகழக பட்டமளிப்பிற்கு என கூறியே
சேலை தெரிவு செய்தார். அப்போது அவர் ஆடை வாங்க செலவிட்ட பணத்தையும், சுவிஸ் கணவனே
அனுப்பி வைத்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் மிக நெருக்கமானவர்களுடன் நடந்த திருமணம் பற்றிய
விபரங்களை ஆசிரியையிடம் பயிலும் மாணவன் ஒருவர் சுவிஸ் கணவரிற்கு முகநூல் ஊடாக
தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, சுவிசிலிருந்து பகீரத பிரயத்தனப்பட்டு மனைவியின் புதிய கணவரின் தொடர்பை,
சட்டபூர்வ கணவன் பெற்றுள்ளார். அந்த நபர் தனது முகநூல் பதிவில், தொடர்ந்து பலருடன்
தொலைபேசியில் பேசி புதிய கணவரின் தொடர்பை பெற்றதாகவும், இலங்கை பணத்தில்
ரூ.200,000 இற்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கணவரை தொடர்பு கொண்டு சுவிஸ் கணவர் தகவல் வழங்கியதையடுத்தே, தான் ஏமாற்றப்பட்டதை
புதிய கணவர் அறிந்துள்ளார்.
அவர் மனைவியை தாக்கி, வாகனத்தில் ஏற்றிச் சென்று மனைவியின் பெற்றோரிடமே ஒப்படைத்து
விட்டு சென்று விட்டார். அத்துடன் விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.
சுவிஸிலிள்ள கணவன் கண்ணுக்குள் எண்ணெய் விட்டபடி, மனைவியின் திருமண முயற்சிகளை தடுத்து
வரும் நிலையில், அவரும், பெண்ணுடன் திருமண விவகாரத்தில் தொடர்புபட்ட ஏனைய இருவரும்
நண்பர்களாகி விட்டனராம்.
தனது மனைவியின் வீட்டின் பழைய புகைப்படத்தையும், தன்னை திருமணம் செய்த பின்னர் வீட்டின்
புகைப்படத்தையும் பதிவிட்டு, மனைவிக்காக 40 இலட்சம் ரூபாவிற்கு அதிக பணத்தை
செலவிட்டதாகவும், தன்னை ஏமாற்றிய மனைவி அவற்றை மீள தனக்கு தர வேண்டுமென்றும்
பதிவிட்டுள்ளார்.
அவரது பேஸ்புக் பதிவையடுத்து ஆசிரியையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியுள்ளது.
மாணவர்கள் உள்ளிட்ட பலர் அதை பகிர்ந்துள்ளனர்.