யாழ்ப்பாணத்தில் குழந்தை ஒன்று விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
5 நாட்களேயான குழந்தை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடி - மந்திகை வைத்தியசாலையினால் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த குழந்தையின் தாய் திருமணமாகாதவர் என்பதனால் அவர் தனது சகோதரிக்கு குழந்தையை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.