எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் நின்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எத்கதுர பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் எல்பிட்டிய வைத்தியாலைக்கு வருகைத்து மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
வீடு நோக்கி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்திற்கு காத்திருந்த நபர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.