விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா இடுப்பு எலும்பு உடைந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவரது பெற்றோர்கள் சென்னை விரைந்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் இடுப்பு எலும்பு உடைந்து மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாஷிகாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், டெல்லியில் இருந்து சென்னை விரைந்துள்ளதாகவும் யாஷிகாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
யாஷிகா விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென பிராத்திப்பதாக சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றன.