நடிகை யாஷிகா விபத்து ஏற்படுவதற்கு முன்பு வேகமாக கார் ஓட்டிய காணொளி ஒன்று லீக் ஆகியுள்ளது.
நடிகை யாஷிகா தனது தோழியை நீண்ட நாள் கழித்து சந்தித்ததை அடுத்து அவருக்கு பார்ட்டி கொடுப்பதற்காக மகாபலிபுரம் சென்று பார்ட்டி முடித்துவிட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில் அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 28 வயதாகவும் பவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றும் இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் ஒரு வாரத்திற்கு முன் தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார் என்றும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சென்னை வந்து நண்பர்களை சந்தித்துள்ள நிலையில் இந்த பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் யாஷிகா மிக வேகமாக கார் ஓட்டியது போலவும் அதை பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் காணொளி எடுத்துள்ளது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த வீடியோவை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் சென்ற யாஷிகா உள்பட யாருமே சீட் பெல்ட் அணியவில்லை என்பதால்தான் உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.