மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இதுவரை 2 இலட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 2 இலட்சத்து ஆறாயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
அத்துடன், எமது மாவட்டத்தில் இதுவரை 8,525பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.