யாழில் கோவில் முன் வாள்வெட்டு: திகிலூட்டும் CCTV காட்சிகள்!


சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சித்தன்கேணி பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்துடன் தொடர்புடைய சர்ச்சையொன்றின் தொடர்ச்சியாக, சிவன் கோயில் வாசலில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தின் 6ஆம் திருவிழாவான நேற்று முன்தினம் குறிப்பிட்டளவான பக்தர்கள் கூடியிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

அரசியல் கட்சியொன்றின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும், இன்னொருவரும் ஆலய வாசலிற்கு வாளுடன் வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதலிற்கு உள்ளானவர் தற்காப்பு கலை பயிற்றுவிப்பர். தற்போது திருநெல்வேலியில் திருமணம் முடித்துள்ளார். அவரும் வாள்வெட்டு நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திள்ளார்.

காயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலை, கையில் காயமேற்பட்டுள்ளது.

ஆலய வாசலில் விழுந்திருந்த வாளையும், கோயிலில் பதிவாகியிருந்த சிசிரிவி காணொளி காட்சிகளையும் ஆலய நிர்வாகம், வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad