எந்நேரமும் பாதாம், பிஸ்தா. 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உல்லாசம்



திருமண தகவல் மைய வெப்சைட் மூலம் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததும்,  அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, பல லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரனுக்கு மேல் அபேஸ்  செய்ததும் தெரியவந்தது. 

திருமண தகவல் மையம் மூலம் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் உல்லாசமாக இருந்து விட்டு நகை, பணத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டில் மத்திய உளவுத்துறையில் உயரதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்(22) சில நாட்களுக்கு முன்பு கானத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தான் மேட்ரிமோனியல் வாயிலாக திருமணத்திற்காக பதிவு செய்திருந்தேன். அப்போது சூர்யா(25) என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. பி.டெக் பட்டதாரியான இவர் பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். என்னை செல்போனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசிக் கொண்டோம். பின்னர் விடுதியில் அறை எடுத்து தன்னுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டார்.

இதையடுத்து நிலம் வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்று 7 லட்ச ரூபாயை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, கோவையில் உள்ள விடுதியில் சூர்யா தங்கியிருப்பது தெரிந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது, ஒரு இளம்பெண்ணுடன் சூர்யா தங்கியிருப்பது தெரிந்தது.  

அவரை பிடித்து விசாரித்தனர். அதில், திருமண தகவல் மைய வெப்சைட் மூலம் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததும்,  அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, பல லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரனுக்கு மேல் அபேஸ்  செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதில் மேலும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆந்திராவில் மத்திய உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நபரின் மகன் தான் இந்த சூர்யா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சூர்யாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad