இந்நிலையில் இவரது வீட்டின் குளியலறையில் ஏதோ மின்னுவது போல் உள்ளதாக வெங்கடேசனின் மனைவி அவரிடம் தெரிவித்துள்ளார். அங்கு சென்று பார்த்த போது வெப்கேமிரா இருந்துள்ளது. சார்ஜ் இறங்காமல் இருக்க அந்த வெப் கேமராவுடன் பவர் பேங்கும் இணைக்கப்பட்டு இருந்துள்ளது. குளியலறையில் கேமராவை கண்ட வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்து போலீஸ் உதவியை நாடினார்.
வழக்குபதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் வெங்கடேசனின் அண்டை வீட்டில் வசிக்கும் 35 வயதான நசீர் அகமது என்பவர் வெங்கடேசனின் வீட்டு குளியல் அறையில் கேமராவை பொருத்தி அவர்கள் குளிப்பதை பார்த்து ரசித்தது அம்பலமாகியது. சில ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசனின் மனைவி மற்றும் மகள் குளிப்பதை மாடியில் இருந்து பார்த்து ரசித்துள்ளார் முகமது நசீர். இதனை தட்டிக்கேட்ட போது முன்னாள் காவல் ஆய்வாளரான முகமது நசீரின் தந்தை, தனது அதிகார தொடர்புகளை பயன்படுத்தி வெங்கடேசனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்னைக்கு மாற்று வழி யோசித்த முகம்மது நசீர், வெங்கடேசனின் வீட்டு குளியல் அறையில் கேமரா பொருத்தி அவர் மனைவி மற்றும் மகள் குளிப்பதை பார்த்து தன் இச்சையை தீர்த்து கொள்ள தொடங்கியுள்ளார். வெங்கடேசனின் குளியல் அறையை ஒட்டி ஒரு வீடு காலியாக உள்ளது. அதனை வாடகைக்கு கேட்டு வருபவர்களிடம் வீட்டை திறந்து காட்ட அந்த சாவியை முகமது நசீரிடம் கொடுத்து வைத்துள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர். இதனை பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள வெங்கடேசனின் குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி பெண்கள் குளிப்பதை ரசித்துள்ளார்.