படல்கும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரயியன் அருவியில் தவறி வீழ்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 வயதுடைய சகோதரன், மற்றும் 23 வயதுடைய சகோதரி ஆகிய இருவரும் பரிதாபமான உயிரிழந்துள்ளனர்.
ஒக்காம்பிடிய பகுதியிலிருந்து படல்கும்பர பகுதிக்கு வருகை தந்து குறித்த அருவியில் நீராடும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர் வீழ்ச்சியினை பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளை சகோதரி கால் இடறி நீர் வீழ்ச்சியினுள் விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்றும் நோக்குடன் யுவதியின் அண்ணன் நீரில் பாய்ந்துள்ள நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக படல்கும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.