இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரோலி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான ஒருவர், தன் 52 வயதான மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட்டதையடுத்து இந்த விபரீதம் நிகழ்ந்தது.
ஓகஸ்ட் 24 அன்று மாவட்ட தலைமையகத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மாடா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ரைலா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அனில் சோன்கர் தெரிவித்தார்.
மனைவிக்கு கள்ளக்காதல் இருப்பதாக கூறி சித்திரவதை செய்து வந்த அந்த நபர், அதன் உச்சக்கட்டமாக மனைவியின் அந்தரங்க பகுதியை தைத்துள்ளார்.
கணவரின் இந்த செயலை தாங்க முடியாத பாதிக்கபட்ட பெண், கணவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய அந்தரங்க உறுப்பில் தையல் போட்ட ஊசியும், நூலும் நீக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது, ‘இதுபோன்ற வெறி செயலை நாங்கள் பார்த்ததில்லை. மருத்துவத்துக்கு பயன்படுத்தும் நூலுக்கு பதிலாக சாதாரண ஊசி மற்றும் நூலால் தையல் போட்டுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வயது தம்பதியருக்கு திருமணமான குழந்தைகள் உள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.