கல்யாணத்துக்கு பிறகும் கள்ளக்காதல். கொடூர கொலையில் முடிந்தது.


திருமணமான பின்னரும் பாடசாலை காதலை கைவிடாமல், கள்ளக்காதலாக தொடர்ந்ததால் 3 உயிர்கள் பறிபோயுள்ளன. காதலியான குடும்பப் பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் கொன்று விட்டு, பாடசாலைக் காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கல்கமுவ, மஹா நன்னேரியா பகுதியின் பிறப்பகுளத்தில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் கடற்படை உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான இந்திகா சாந்தி (28), அவரது 10 வயது மகன், .பாடசாலை காதலனான துஷார குமார (28) ஆகியோரின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. 

பொல்பித்திகம பகுதியில் வசிக்கும் இந்திகா, சில மாதங்களுக்கு முன்பு கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகாநன்னேரிய பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு சென்றார். அவரது கள்ளக்காதல் காரணமாக சொந்த இடத்திலிருந்து அங்கு வந்தனர். இந்திகா சாந்தி தனது 18வயதில் மொரகொல்லாகம பகுதியில் வசிக்கும் கடற்படை உத்தியோகத்தரை மணந்தார்.

அவர் தற்போது வெலிசர முகாமில் பணிபுரிந்து வருவதாக தெரியவருகிறது. இந்திகாவிற்கு பாடசாலை காதல் இருந்தது. அது திருமணத்தில் முடியவில்லை. நன்னேரியவில் வசிக்கும் துஷார குமார, இந்திகாவின் பாடசாலைக் காதலன். 

இந்திகா திருமணம் முடித்து, இரண்டு பிள்ளைகளின் தாயானாலும், பாடசாலை காதலை கைவிடவில்லை. கணவன் வேலைக்கு சென்ற பின்னர், இருவரும் சந்தித்துக் கொண்டனர். தனது சட்டபூர்வ கணவர் பணிக்கு சென்ற பின்னர், பாடசாலை காதலனுடன் உறவில் இருந்தார். 

காதலுக்கு வீடுதான் வசதியென நினைத்த இந்திகா, தயங்காமல் பாடசாலை காதலனை வீட்டுக்கு அழைத்தார். அயலவர்களிற்கும் அது தெரிந்த விடயமானது. இந்திகாவின் மூத்த மகன், தனது தாயாரின் பாடசாலை காதலனை மாமா என்று அழைக்கும் அளவிற்கு உறவை பகிரங்கமாக வைத்திருந்தார். 

இது, கணவனிற்கு தெரிந்து குடும்பத்திற்குள் பிரச்சனையானது. எனினும், பாடசாலை காதலனை கைவிட இந்திகா தயாராக இல்லை. இதனால் குடும்பத்திற்குள் மோதல் முற்றியது.

இந்த விவகாரம் கல்கமுவ பொலிஸ் நிலையம் வரை சென்றது. இந்த நிலையில், கடந்த 7 ம் திகதி காலை உறக்கத்திலிருந்து எழுந்த இந்திகாவின் இளைய மகன்- 5 வயதானவர்- அருகில் உள்ள வீட்டிற்கு சென்று தனது தாயும் சகோதரனும் அசையாமல் படுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

அண்ணனின் தலையிலிருந்து இரத்தம் வருவதாகவும் கூறியுள்ளார். பக்கத்து வீட்டு பெண் இந்திகாவின் தொலைபேசிக்கு அழைப்புகளை எடுத்தார். ஆனால் அவர்களுக்கு பதிலளிக்க இந்திகா உயிருடன் இல்லை. 

அயல்வீட்டினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கினர். பொலிசார் வீட்டை சோதனையிட்டதில் 3 பேரின் சடலங்களை மீட்டனர். தாயும், மகனும் கழுத்து நெரிக்கப்பட்டு, தலையில் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 

பாடசாலை காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்த இடத்தில், பாடசாலை காதலனின் கைத்தொலைபேசியும், அவரால் எழுதப்பட்ட சிறிய குறிப்பும் காணப்பட்டுள்ளது. 

இந்திக்காவுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரையும் குழந்தையையும் 7 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரால் எழுதப்பட்ட குறிப்பில், தாயாரை கவனித்துக் கொள்ளும்படி தனது சகோதரனுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad