கணவன் இல்லாத நேரம் மருமகளுக்கு தொல்லை. சாப்பாட்டில் விசம் வைத்து கொலை.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபாராஜனுக்கும், கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், இந்த தம்பதி குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில், மகன் இல்லாத சமயத்தில் மருமகள் கனிமொழிக்கு மாமனார் முருகேசன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

முதுகுளத்தூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை உணவில் விஷம் வைத்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபாராஜனுக்கும், கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், இந்த தம்பதி குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில், மகன் இல்லாத சமயத்தில் மருமகள் கனிமொழிக்கு மாமனார் முருகேசன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக கணவரிடம் மனைவி பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், எனது தந்தை அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாமனார்பாலியல் சீண்டலை அதிகரித்துள்ளார். நாளுக்கு நாள் மாமனார் தொல்லை எல்லை மீறியதால் கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில், ஜூலை 31-ம் தேதி இரவு மாமனாருக்கு உணவு கொடுக்கும்போது குழம்பில் எலிபேஸ்ட் கலந்துக்கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். யாருக்கும் எதுவும் சந்தேகம் வராததால் முருகேசனுக்கு இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தது. உணவில் விஷம் வைத்து கொலை செய்த மருமகள் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் தொடர்ந்தும் மறைத்து வந்துள்ளார்.

மாமனாரை கொலை செய்ததால் மருமகள் கனிமொழி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மாமனாரை கொலை செய்ததாக கீழத்தூவல் காவல்நிலையத்தில் மருமகன் சரணடைந்தார். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad