யூரியூப் பார்த்து மோசமான குழம்பு. மனைவியை அடித்தே கொன்ற கணவன்.

யூடியூப் ரெசிபியை பார்த்து மோசமான சிக்கன் குழம்பு வைத்த மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசிவிட்டு, தனது மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சோழதேவனஹள்ளி தரபனஹள்ளியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரீன் பானு. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி ஷெரீன் பானு மாயமானதாக கூறப்படுகின்றது. ஆனால் ஷெரீன் பானு பெற்றோரிடம் முபாரக் எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் முபாரக் மீது சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை பிடித்து விசாரிக்க முயன்ற நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார்.

அவரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், தனது வழக்கறிஞருடன் சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில்ன் சரண் அடைந்த கணவர் முபாரக், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார்.

முபாரக் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் பெங்களூருவுக்கு வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். மனைவியின் சமையல் சரியில்லை என்று முபாரக் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவனின் மனதை கவர யூடியூப் வீடியோவெல்லாம் பார்த்து கடந்த 5ஆம் திகதி சிக்கன் குழம்பு சமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. அப்போதும் சிக்கன் குழம்பு ருசியாக இல்லாததால் ஆத்திரம் அடைந்த முபாரக், மனைவி ஷெரீன் பானுவுடன் சண்டை போட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த முபாரக், வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் தாக்கி ஷெரீன் பானுவை கொலை செய்ததாகவும், பின்னர் அவரது சடலத்தை ஒரு மூட்டையில் வைத்து கட்டி சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து மனைவியை கொலை செய்து விட்டு மாயமானதாக நாடகமாடிய கணவன் முபாரக்கை கைது செய்த போலீசார், சிக்கபானவாரா ஏரியில் வீசப்பட்ட ஷெரீன் பானுவின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad