செல்பி எடுக்க முயன்று பண்ணை கடலில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம், பண்ணை கடலில் செல்பி எடுக்க முயன்ற போது கடலில் தவறிவிழுந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாவலர் வீதியை சேர்ந்த கந்தசாமி கௌதம் (29)என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ் நகரிலுள்ள தனியார் விடுதியில் பணியாற்றி வரும் அவர், நேற்று மாலை நண்பர்களுடன் பண்ணை பாலத்தில்  நண்பர்களுடன் நின்ற சமயத்தில், செல்பி எடுக்க முயன்றார். இதன்போது தவறி கடலுக்குள் விழுந்தார்.

நீரில் மூழ்கிய அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad