கள்ளக் காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவன்.

ஆத்திரமடைந்த நிஜாம் மனைவி சுமய்யாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், மூச்சுதிணறி மயக்கமடைந்தார். இதையடுத்து, நிஜாம் அக்கம்பக்கதினரிடம் மனைவி சமையல் அறையில் திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறினார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் தாலி கட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் அருகே மயிலாப்பூரை சேர்ந்தவர் நிஜாம்(39). அந்த பகுதியில் கோல்டு கவரிங் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சுமய்யா(25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே நிஜாமுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து கள்ளக்காதலியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்த விவரம் மனைவி சுமய்யாவுக்கு தெரியவந்தது.

இதனால், அடிக்கடி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த நிஜாம் மனைவி சுமய்யாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், மூச்சுதிணறி மயக்கமடைந்தார். இதையடுத்து, நிஜாம் அக்கம்பக்கதினரிடம் மனைவி சமையல் அறையில் திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறினார்.

உடனே அவர்கள் சுமய்யாவை மீட்டு கொல்லம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுமய்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்த, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சுமய்யா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, நிஜாமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad