சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் கைகலப்பாக மாறியது.
இதன்போது மரணமடைந்த நபரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்குதலுக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மகளும் குறித்த நபரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல்
வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார். மகள் தலையில் பலத்த காயம்
ஏற்பட்டு உள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவரே மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.