தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு அந்தப் பெண்ணை டியூஷன் வாத்தியார் கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க காவல் துறையும், அரசும் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆறு மாத குழந்தை முதல் 60 வயது பெண்மணி வரை கற்பழிப்புக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் நாட்டில் அதிகரித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழிப்பு செய்வது. காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணத்திற்குப் பின்னர் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி மனைவியை அடித்து துன்புறுத்துவது என பலவிதங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, பாடம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்களும் மறுபுறம் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் மூன்று ஆண்டுகளாக தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவியை டியூஷன் வாத்தியார் கர்ப்பம் ஆகியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கந்தடா மண்டலத்தைச் சேர்ந்த 16 வயது பெண், அந்தப் பகுதியில் டிவிஷன் நடத்தி வரும் ஒரு ஆசிரியரிடம் கடந்த 3 ஆண்டுகளாக டியூஷன் படித்து வருகிறார். அந்த பெண் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில், அந்தப் பெண்மீது டியூஷன் மாஸ்டருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவிகளை நேரத்துடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த குறிப்பிட்ட மாணவிக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதாக கூறி அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார் டியூஷன் வாத்தியார் .
பிறகு நாளடைவில் அந்தப் மாணவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி அந்த மாணவியுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் அவர், இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனதாக தெரிகிறது. பின்னர் அந்த மாணவிக்கு உடல் ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் அவரது பெற்றோர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது, மேலும் தலைசுற்றல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் மாணவிக்கு ஏற்பட்டதால், அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அந்தப்பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள். அந்தப் பெண்ணை அடித்து விசாரித்ததில், தனது டியூஷன் வாத்தியார் அடிக்கடி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக விஷயத்தை உடைத்தார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் டியூஷன் வாத்தியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள போலீசார், ஏற்கனவே அந்த டியூஷன் வாத்தியார் தனது மாமன் மகளை திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது மாணவியுடன் கடந்த ஒரு வருடமாகவே அவர் தவறான உறவில் இருந்து வந்ததாக கூறியுள்ளனர். ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதாக கூறி மாணவியை டியூஷன் வாத்தியார் கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.