குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று அங்க பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழ்ந்துவரும் குறித்த சிறுமியை சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை பலாத்தகாரம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த 21 வயது இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் கைது செய்தவரை இன்று (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.